சென்னையில் 6 இடங்களில் ‘அம்மா வாரச்சந்தை’. மலிவு விலையில் அரிசி முதல் காய்கறி வரை கிடைக்கும்.

amma varasandhaiசென்னையில் 6 இடங்களில் “அம்மா’ வாரச் சந்தைகள்’ அமைக்கப்பட ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அம்மா வாரச் சந்தைகள் அமைக்கப்படும் என மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 6 இடங்களில் ‘அம்மா வாரச்சந்தை’ அமைக்கப்படும் என்றும் படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற இடங்களிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அமைக்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நுகர்வுப் பொருள்களை மலிவு விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அம்மா வாரச் சந்தைகள் எதிர்காலத்தில் சென்னையில் உள்ள
200 வார்டுகளிலும்  அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது  மண்டலத்துக்கு 1 என்ற விகிதத்தில் 15 அம்மா வாரச் சந்தைகள் அமைக்கவேண்டும் என உத்தேசிக்கப்பட்ட போதிலும். முதல்கட்டமாக அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, தரமணி ராஜீவ்காந்தி சாலை, தங்கசாலை மேம்பாலம் அருகில், நந்தனம் டர்ன்புல்ஸ் சாலை, வளசரவாக்கம் ஆற்காடு சாலை, சாலிகிராமம் ஆகிய ஆறு இடங்களில் அம்மா வாரச்சந்தைகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் சந்தைகள் அமைக்க வடிவமைப்பும் தயார் நிலையில் உள்ளன.

இந்த வாரச்சந்தைகளில் அரிசி உள்ளிட்ட தானியங்கள், சர்க்கரை, வெல்லம், பால் பொருள்கள், காய்கறிகள், வீட்டு உபயோக பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்கள் 50 சதவீதம் குறைந்த விலையில் விற்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply