வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கைகளுக்கு தான் பாராட்டு தெரிவிப்பதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் நேற்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் நேற்று பேட்டியளித்த இம்ரான்கான், மோடியை பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்தபோதிலும், அவர் ஒரு நம்பிக்கையான மனிதர்’ என்பது மட்டும் உண்மை. மோடியின் நடவடிக்கைகள் போலவே பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய பாகிஸ்தான் எல்லை பிரச்சனை தொடர்பாக மோடியை பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில் பாகிஸ்தான் நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஒருவர் இந்திய பிரதமரின் நடவடிக்கைகளை பாராட்டியிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.