தமிழ், தெலுங்கு , இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது தனது தந்தை கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் கமல்ஹாசனும், ஸ்ருதிஹாசனும் மனம் விட்டு பேசிக்கொண்டார்களாம். அலுவலகத்தின் வெளியே நின்றிருந்த பைக்கை பார்த்ததும் ஸ்ருதிக்கு சிறுவயது ஞாபகம் வந்ததாக கூறினார்.
சிறுவயதில் நானும் என்னுடைய அப்பாவும் நள்ளிரவில் பைக்கில் சென்னை நகரின் முக்கிய தெருக்களை சுற்றுவோம். எங்கள் இருவருக்கும் இடையே பைக்ரேஸ் கூட நடந்ததுண்டு. அந்த இனிமையான மலரும் நினைவுகளை தற்போது நினைத்து பார்த்ததாக ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது சினிமாவில் இருவருமே பிசியாக இருப்பதால் தன்னால் தன்னுடைய தந்தையுடன் அதிக நேரம் செலவழிக்கவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் அவர் கூறினார்.
ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் 58 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் அவர் மூன்று இந்தி படங்களிலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.