சென்னையில் பிரம்மாண்டமான வீட்டுக் கண்காட்சி

chaitanya

சென்னை மற்றும் கேரளாவின் 150 முன்னணி பில்டர்கள் கலந்துகொள்ளும் பிரம்மாண்டமான ‘கிரஹப்பிரவேசம்’ என்னும் தலைப்பில் வீட்டுக் கண்காட்சி வரும் நவம்பர் 8, 9-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியை ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனமான இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் நடத்துகிறது.

ரூ.5 லட்சத்துக்கான பிளாட் முதல் ரூ.3 கோடிக்கான வில்லா வரையில் ஏராளமான ப்ராப்பர்ட்டிகளை டெவலப்பர்கள் இங்கு காட்சிப்படுத்துகின்றனர். வங்கிக் கடனில் இருந்து உள் அலங்காரம் வரை அனைத்துத் தேவைகளையும் இங்கு ஒரே இடத்தில் பெறமுடியும். பிரின்ட், டிஜிட்டல் என இரு வடிவிலும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 3டி பேனோ எக்ஸ் என்ற அப்ளிகேஷன் மூலம் ப்ராப்பர்ட்டிகளைப் பார்வையாளர்கள் எளிதாகப் பார்க்க முடியும்.

நாட்டிலேயே முதல்முறையாக இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் உருவாக்கிய வர்ச்சுவல் பிராப்பர்ட்டி டூர் தொழில்நுட்ப சேவையையும் பெறமுடியும். மோஷன் சென்சார் உதவியுடன் செயல்படும் இந்தச் சேவை, வீடு வாங்க விரும்புவர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இங்கு 400-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. “உற்பத்தி, கல்வி, ஐ.டி. ஆகிய துறைகளில் சென்னை கடந்த சில ஆண்டுகளாகவே அபார வளர்ச்சி பெற்று வருகிறது. ரியல் எஸ்டேட் துறையும் சீரான வளர்ச்சி பெற்று வருகிறது.

images

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், இங்கேயே மாநகரத்தை நோக்கி நகர்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சொந்த வீடு, வாடகை வீட்டுக்கான தேவை, முதலீட்டாளர் சந்தை ஆகியவை தொடர்ந்து வளர்ச்சி பெற்றுவருகிறது” என்கிறார் இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கணேஷ் வாசுதேவன். வீட்டுக்கான தேவையை நிறைவேற்றும் பொருட்டு இந்தக் கண்காட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply