டெல்லியில் மாணவ-மாணவியர்கள் நடத்திய முத்தமிடும் போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மாணவ மாணவிகள் பொது இடத்தில் முத்தமிடும் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் அந்த போராட்டத்தை முறியடித்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது, இந்த முத்தமிடும் போராட்டம் படிப்படியாக அனைத்து மாநிலங்களுக்கும் பரவி இன்று தலைநகர் டெல்லிக்கும் பரவியுள்ளது. இந்து அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்டித்து மத்திய டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் எதிரே இன்று காலை முத்தமிடும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்காக பல்வேறு கல்லூரிகளின் மாணவர் சங்கங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஜந்தேவாலன் மெட்ரோ ரயில் நிலையம் அருகே திரண்டு வந்தனர். இந்த முத்தமிடும் போராட்டத்தை வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்கள் முன்னிலையில் மாணவ, மாணவிகள் நடத்திய முத்தமிடும் போராட்டத்தை பலர் பரபரப்போடு லைவ்வாக கிளுகிளுப்படன் பார்த்து கொண்டிருந்தனர்.
இந்த போராட்டத்துக்கு பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும், போராட்டம் நடந்த இடத்துக்கு ஆர்.எஸ்.எஸ்.,மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் வந்து கண்டனம் தெரிவித்ததால் அங்கு மோதல் ஏற்படும் நிலை உருஆனது. இந்த தகவல் உடனடியாக டெல்லி போலீஸாருக்கு தெரிந்து அவர்கள் உடனே விரைந்து வந்து முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்ட 70 மாணவ, மாணவிகளை கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.
இதற்கிடையே முத்தமிடும் போராட்டத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் புதிய பக்கம் தொடங்கப்பட்டு பிரசாரம் செய்யப்படுகிறது. இதில், நேற்று இரவு வரை சுமார் 1 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பேஸ்புக்கில் முத்தமிடும் படங்களும் ஏராளமாக இடம் பெற்றுள்ளது.