இந்தியா-இலங்கை 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி. இந்தியா அபார வெற்றி.

cricketநேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.

நேற்று ஐதராபாத் நகரில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  இலங்கை அணி டாஸ் வென்றது. இதனால் அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இந்திய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக இலங்கை அணியின் ஜெயவர்தனே தவிர மற்ற அனைத்து வீரர்களும் ரன் எடுக்க திணறினர்.ஜெயவர்தனேவின் மட்டும் அதிரடியாக ஆடி 118 ரன்கள் எடுத்தார்.  இலங்கை அணி 48.2 அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து  242 ரன்கள் எடுத்தது. இந்திய பவுலர்கள் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், ஆக்ஷார் பட்டேல் 3 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.

 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவதாக பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய இந்திய அணி, தவான், 44.1 ஓவரில் 245 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் 91 ரன்கள், விராத் கோஹிலி 53 ரன்கள்,  ராயுடு 35 ரன்கள், ரஹானே 31 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி வெற்றி பெற்றபோதிலும், சதமடித்த இலங்கை அணி வீரர் ஜெயவர்த்தனே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply