காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக உள்ளதாக புதிதாக பொறுப்பேற்ற தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.
4
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் கூடிய தண்டனை பெற்றதால் அவர் வகித்த வந்த எம்.எல்.ஏ பதவி பறிபோனது. இதனால் அவர் வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியை காலியானது என்று அறிவிக்க வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
எனவே ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி காலியாக உள்ளதாக நேற்று சட்டப்பேரவை செயலர் அறிவித்ததை தொடர்ந்து அந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபட தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசிடம் இருந்து முறைப்படி தகவல் வந்துள்ளது.மேலும் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது” என்றார்.
எனவே இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.