நடிகை ஹேமாமாலினி தத்தெடுத்த உ.பி கிராமம். சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறுமா?

hemamaliniஇந்தியாவில் உள்ள பிரபலங்கள் ஒவ்வொருவரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும் என பாரத பிரதமர் மோடி சமீபத்தில் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து முதல் ஆளாக நடிகை ஹேமாமாலினி உ.பி மாநிலத்தில் உள்ள ராவல் என்னும் கிராமத்தை தத்தெடுத்தார்.

யமுனை நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள இந்த ராவல் என்னும் கிராமம் வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்தாலும், இதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. இந்நிலையில் பிரபல நடிகையும், எம்.பியுமான ஹேமாமாலினி இந்த கிராமத்தை தத்தெடுத்தார். இந்த கிராமத்தின் வரலாற்று பெருமையை மீண்டும் உலக மக்களுக்கு தெரிய படுத்துவோம் என்றும்,  இந்திய சுற்றுலா வரைபடத்தில் இந்த கிராமத்தை இடம்பெறச் செய்வேன் என்றும் அவர் உறுதி பூண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராவல் கிராமம், மதுரா நகரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில்  அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் 4500 பேர் வசித்து வருகின்றனர்.தத்தெடுப்புக்காக 179 கிராமங்களின் பெயர்களை பரிசீலித்த ஹேமமாலினி, இறுதியில் இந்த ராவல் கிராமத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply