நான் இதுவரை பணிபுரிந்த நடிகர்களிலே மிகவும் நாகரிகமான மனிதர் அஜீத்தான் என நடிகர் அர்ஜூன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அஜித்தைப் புகழ்ந்திருக்கிறார்.
அர்ஜூன் நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான ஜெய்ஹிந்த் 2 படம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அர்ஜூன், ‘ஜெய்ஹிந்த் 2 படத்திற்காக இரண்டு வருடம் கடுமையாக உழைத்திருப்பதாகவும், இந்த படம் உருவாக தனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் தான் நன்றி கூறிக்கொள்வதாகவும் கூறினார். மேலும் அவருடன் கமல், அஜீத், உள்பட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருப்பதாகவும், இதுவரை தான் உடன்நடித்த நடிகர்களில் அஜீத்தை போல ஒரு ஜெண்டில்மேனை தான் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் ஹீரோக்களில் தனக்கென தனி இடம் பெற்றிருக்கும் நடிகர் அர்ஜூன் தனது உடலை டயட் , உடற்பயிற்சி என அனைத்தையும் சரியான முறையில் செய்து 52 வயதிலும் இளமையோடு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தான் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் தனது மகள் ஐஸ்வர்யாதான் ஹீரோயின் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.