தமிழக முதல்வருடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு.

ops meet ponதமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் ஆகியோர் நேற்று தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”முழுமையாக கட்டப்படாமல் பாதியில் நிற்கும் மதுராவாயல் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்தோம். மேலும், கப்பல் போக்குவரத்து சார்ந்த தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும், குளச்சல் துறைமுகத்தை மத்திய அரசு நடத்த தயாராக உள்ளது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு இருக்கிறார். இதனால், தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

இதேபோல், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் உள்கட்டமைப்பிற்கான மலேசிய நாட்டு சிறப்பு தூதர் டத்தோ செரி எஸ்.சாமிவேலு மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, சென்னையில் உள்ள மலேசிய தென்னிந்தியாவிற்கான தூதர் சித்ரா தேவி ராமய்யா உடன் இருந்தார்

Leave a Reply