அமெரிக்கா அருகில் உள்ள மெக்சிகோவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலர் லுகுலா என்ற இடத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்த 43 மாணவர்களை கடத்தி சென்றது. அவர்களை தேடும் பணியில் மெக்சிகோ அரசு ஈடுபட்டிருந்த நிலையில் தற்போதுபோது 43 மாணவர்களையும் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த அதிர்ச்சியான செய்தியை கேட்ட லுகுலா நகர மக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அரசின் கையாலாகாத செயலை கண்டித்து அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று குரைரோ சட்டசபை கட்டிடத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் திரண்டு சென்று சட்டசபை கட்டிடத்துக்குள் நுழைந்து தீவைத்தனர். அவர்களை போலீஸார் தடுக்க முயன்றும் போலீசாரை அடித்து தள்ளிவிட்டு கலவர கும்பல் சட்டசபைக்கு தீ வைத்துள்ளது.
கட்டிடத்தின் அருகே நிறுத்தியிருந்த 10–க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆளும் கட்சி அலுவலகத்துக்கும் தீ வைத்தார்கள். தொடர்ந்து அங்கு கலவரம் நடந்து வருகிறது. மாணவர்கள் கடத்தப்பட்டு 3 வாரம் கடந்த நிலையிலும் அரசு அவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காததால் மக்கள் கொந்தளித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.