ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

 

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

ref2

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனத்தின் விசாகப்பட்டினம், மும்பை மற்றும் கொல்கத்தா மையங்களின் சுத்திகரிப்பு ஆலைகளில் காலியாக உள்ள 100 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெக்னீசியன் ஆபரேசன்ஸ் – 2.
பணி: டெக்னீசியன் பாய்லர்
காலியிடங்கள்: 73
டெக்னீசியன் ஆபரேசன்ஸ் – 2 பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் 60 சதவிகித மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் டிப்ளமோ அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியலை ஒரு பிரதான பாடமாகக் கொண்டு இயற்பியல், கணிதம் ஆகிய துணைப் பாடங்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டெக்னீசியன் பாய்லர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன்- எலக்ட்ரிக்கல்
காலியிடங்கள்: 06
தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன்- இன்ஸ்ட்ருமென்டேசன்
காலியிடங்கள்: 03
தகுதி: இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன்: (மெக்கானிக்கல்)
காலியிடங்கள்: 09
தகுதி: மெக்கானிக்கல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: கிராப்ட்ஸ்மேன் – மெயின்ட்டெனன்ஸ், மெக்கானிக்கல்
காலியிடங்கள்: 03
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எஸ்எஸ்எல்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: லேபரட்டரி அனலிசிஸ்ட்
காலியிடங்கள்: 01
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியலை பிரதானமாகக் கொண்டு கணிதம், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை துணை பாடங்களாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் அட்மினிஸ்டிரேசன் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 01
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி, பி.காம் முடித்து கணினியில் எம்.எஸ். ஆபீஸ் முடித்திருக்க வேண்டும்.

பணி: பாய்லர் அட்டெண்டென்ட்
காலியிடங்கள்: 04
தகுதி: மெக்கானிக்கல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் பாய்லர் தகுதிச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.01.2014 தேதியின்படி 21 – 25க்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 வருடங்களும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் அல்லது செலான் முறையில் செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பதார்களுக்கு வேண்டிய முழுமையான விவரங்களுக்கு www.bpclcareers.com அல்லது www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply