பாம்புடன் புகார் கொடுக்க வந்த பெண். சென்னையில் பரபரப்பு.

snake சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு பாம்புடன் புகார் கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்பாக்கம் புல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் இசபெல்லா (39). இவர் கையில் இறந்த நிலையில் இருந்த பாம்புடன், சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவல கத்துக்கு நேற்று மதியம் 1.30 மணி அளவில் வந்தார். அப்போது அவர்,

யாரோ பாம்பை அடித்து என்னுடைய வீட்டில் நேற்று இரவு போட்டு விட்டனர். காலை எழுந்து பார்த்த போது, வீட்டில் பாம்பு இருந்தது. இதுபற்றி கீழ்பாக்கம் போலீஸில் புகார் அளிக்க சென்றேன். ஆனால், அவர்கள் புகார் எடுக்க மறுத்துவிட்டனர்.அதனால், புகார் தெரிவிக்க பாம்புடன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தேன். நான் கமிஷனரை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், புகார் கொடுக்கலாம் வாங்க என்று வேப்பேரி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பெண் பாம்புடன் வந்ததால், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க பாம்புடன் வந்த பெண்.

Leave a Reply