மேஷம்
தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், கருநீலம்
ராசி குணங்கள்
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், கிரே
ராசி குணங்கள்
கடகம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களைக் குறைக் கூறுவதை நிறுத்துங்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் முக்கிய பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை, மஞ்சள்
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:ஊதா, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சிலர் உங்களிடம் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:மயில் நீலம், ப்ரவுன்
ராசி குணங்கள்
துலாம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, பச்சை
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடல் நலம் சீராகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:பிங்க், க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள்
தனுசு
சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை, மஞ்சள்
ராசி குணங்கள்
மகரம்
பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண், வெள்ளை
ராசி குணங்கள்
கும்பம்
ராஜதந்திரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி மெச்சுவார். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:மயில்நீலம், பிங்க்
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை, ரோஸ்