கொல்கத்தா சிறையில் தற்கொலைக்கு முயன்ற திரிணாமுல் கட்சி எம்.பி. பெரும் பரபரப்பு

gunal goshஇந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாரதா நிதி நிறுவனத்தில் நடந்த மோசடியில் கைதாகி சிறையில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி , கொல்கத்தா சிறையில் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

சாரதா நிதி நிறுவனத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.,பி. குணால் கோஷ் நேற்று கொல்கத்தா சிறையில் 58 தூக்க மாத்திரைகளை தின்று குணால் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மயங்கி விழுந்த அவரை சிறை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்து வருகிறது. அவருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

குணால்கோஷ் தற்கொலை முயற்சி பெரும் சந்தேகத்திஅ கிளப்பியுள்ளதாகவும், அவரை தற்கொலை செய்ய யாரவது தூண்டினார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். குணால்கோஷ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரிணாமுல் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply