கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருப்பர் சரிதாநாயர். இவரது ஆபாச காட்சிகள் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சரிதாநாயர் ஏற்கனவே பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார். அதனை விசாரித்த கோர்ட்டு இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. போலீசாரின் விசாரணை தொடங்கியதும் சரிதாநாயரின் ஆபாச காட்சிகளை செல்போனில் ‘டவுன்லோடு’ செய்து பார்த்தவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என தகவல் பரவியது. இதனால் சரிதாநாயரின் ஆபாச காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வைத்தவர்கள் அந்த வீடியோவை அவசர அவசரமாக அழித்தனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. பாலசுப்பிரமணியன் அலுவலகத்திற்கு சரிதாநாயர் திடீரென சென்றார்.
அங்கு அவரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
கேரள மாநிலத்தில் தென் மண்டல ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் பத்மகுமார், முன்பு திருவனந்தபுரம் சரக ஐ.ஜி.யாக இருந்த போது தான் நான் கைது செய்யப்பட்டேன். அப்போது என்னிடம் இருந்து 7 செல்போன்கள், 2 லேப் டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை கோர்ட்டில் ஒப்படைக்கும் போது ஒரு லேப்டாப்பும், 4 செல்போன்கள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டது. 3 செல்போன்களும், ஒரு லேப்டாப்பும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படவில்லை. அந்த லேப்டாப்பில் தான் என்னுடைய ஆபாச காட்சி இருந்தது.
எனவே அது வெளியில் கசிந்து வாட்ஸ்அப்பில் பரவ அப்போதைய போலீஸ் ஐ.ஜி. பத்மகுமார் தான் காரணமாக இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன். இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
போலீஸ் ஏ.டி.ஜி.பி. பத்மகுமார் மீது சரிதாநாயர் புகார் கூறியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.