தங்கம், வெள்ளியில் புதிய நாணயங்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம். அமெரிக்கா அதிர்ச்சி

coinsதங்கம், வெள்ளி, மற்றும் செம்பு ஆகிய உலோகங்களில் தங்களுக்கென புதிய நாணயங்களை உருவாக்க ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதனால் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாதபோர் தொடுத்து, அந்த நாடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை தங்கள் வசம் கொண்டு வந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களுடைய பரிமாற்றத்திற்காக புதிய நாணயங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்லாமிய நாடு என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த நாட்டில் இந்த புதிய நாணயங்களை புழக்கத்தில் விட தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு தாங்கள் கைபற்றிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணெய் விற்பனை, பிணைக் கைதிகளை விடுவித்தல், வரி மற்றும் திருடப்பட்ட கலைப்பொருட்கள் விற்பனை மூலமும் ஏராளமான வருமானத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், தங்களுக்காக புதிய நாணயத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தங்கத்திலான இரண்டு நாணயங்கள், வெள்ளியில் மூன்று நாணயங்கள், செம்புவில் இரண்டு நாணயங்கள் என மொத்தம் ஏழு நாணயங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த நடவடிக்கை, கடவுளுக்கு முற்றிலும் அர்ப்பணித்து, சாத்தான்களின் வட்டியை அடிப்படையாகக் கொண்ட உலகப் பொருளாதார அமைப்பில் இருந்து இஸ்லாமியர்களை நீக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிய நாணயத்தின் மாற்று விகிதம் மற்றும் நாணயம் கிடைக்கும் இடங்கள் தொடர்பாக விளக்கம் அளித்து மற்றொரு அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply