பெண்களைப் பாதுகாக்க வந்துவிட்டது எஸ்ஓஎஸ் ஆப்!
பெண்கள் இட ஒதுக்கீடு, பெண்கள் பாதுகாப்பு, பெண்ணுரிமை என்று நாம் நிறைய பேசிவிட்டோம்; பேசிக் கொண்டிருக்கிறோம். கான்பூர் காவல்துறை, பெண்கள் பாதுகாப்புக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் களத்தில் இறங்க ஆரம்பித்து விட்டது.
பெண்களைப் பாதுகாப்பதற்கென்றே மொபைல் போன் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி இருக்கிறது கான்பூர் காவல்துறை. டெல்லி காவல்துறையில் பணிபுரியும் சில எக்ஸ்பெர்ட்டுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘எஸ்ஓஎஸ்’ எனும் ஆப். SOS என்றால் SAVE OUR SOULS (காப்பாற்றுங்கள்) என்று அர்த்தம்.
இந்த ஆப்-பை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில், கூகுள் ப்ளே ஸ்டோரில் வழக்கம்போல டவுன் லோடு செய்து கொள்ளலாம். டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து இது ஆக்டிவேட் ஆகிறது. பெண்கள் தனியாகப் பயணிக்கும்போது, ஆபத்து ஏற்பட்டாலோ, ஈவ்-டீஸிங்குக்கு ஆட்பட்டாலோ, இந்த ஆப்-பை ப்ரெஸ் செய்த அடுத்த சில நிமிடங்களில், கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் போய், காவல்துறை ஸ்பாட்டில் ஆஜராகி கயவர்களுக்கு ஆப்பு அடித்துவிடும்.
“அது மட்டுமில்லை; உங்கள் மொபைலில் முக்கியமான நான்கு கான்டாக்ட்டுகளைப் பதிவிறக்கம் செய்து, அவர்களுக்கும் தகவல் கொடுத்து வரவழைக்கலாம்” என்று சொன்னார் கான்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர்.
இந்த ஆப்-பின் வெளியீட்டு விழா, கான்பூர் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பிரபல பேட்மின்ட்டன் வீராங்களை ஜ்வாலா கட்டா கலந்து கொண்டு, இந்த அப்ளிகேஷனை லாஞ்ச் செய்து வைத்தார்.
பெண்களுக்குத் தோழியாகவும்; எதிரிகளுக்கு ஆப்பு அடிக்கவும் வந்து விட்டது எஸ்ஓஎஸ் ஆப்!