தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி

தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி

teach1

தமிழ அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி குறியீடு: 14PG

அறிக்கை வெளியிடப்பட்ட தேதி: 07.11.2014

மொத்த காலியிடங்கள்: 1,807

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

* தமிழ் – 277

* ஆங்கிலம் – 209

* கணிதம் – 222

* இயற்பியல் – 189

* வேதியியல் – 189

* தாவரவியல் – 95

* விலங்கியல் – 89

* வரலாறு – 198

* பொருளியல் – 177

* வணிகவியல் – 135

* உடற்கல்வி – 27

பணி: முதுகலை பட்டதாரி ஆசிரியர்

வயதுவரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,800.

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.500. தாழ்த்தப்பட்டடோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250. இதனை STATE BANK OF INDIA, INDIAN OVERSEAS BANK, INDIAN BANK-ன் ஏதாவதொரு கிளையில் விண்ணப்ப கட்டணத்திற்கான செலானை பூர்த்தி செய்து ரொக்கமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரக்கள் தங்களது மாவட்ட தலைமை கல்வி அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணத்துக்கான செலான் இணைக்கப்பட்டிருக்கும். இதனை பயன்படுத்தி தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் செலானையும் இணைத்து விண்ணப்ப படிவம் பெற்ற தங்களது மாவட்ட தலைமை கல்வி அலுவலகத்திலேயே செலுத்த வேண்டும்.

சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வாணையக் குழுவில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் விற்பனைக்கான கடைசி தேதி: 26.11.2014

தேர்வு நடைபெறும் தேதி: 10.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp;//trb.tn.nic.in/PG2014/07112014/Notitication.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply