அஜீத், ஆர்யா, நயன்தாரா நடித்த ஆரம்பம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை அக்ஷராவை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த அக்ஷரா இன்று மும்பை காவல்நிலையத்திற்கு வந்து ஒரு திடுக்கிடும் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
பல இணையதளங்களில் அவருடைய புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாக வந்து கொண்டிருப்பதாகவும் இதனை உடனே தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தான் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்றும் ஆனால் தன்னுடைய புகைப்படத்தை பலர் தங்களுடைய புரொபைல் பிக்சராக வைத்திருப்பதாகவும் ஒருசிலர் தன்னுடைய பெயரில் போலி கணக்குகள் திறந்திருப்பதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அக்ஷாரா தற்போது ஒருசில இந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.