சென்னை கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்த போலி எஸ்.ஐ. பெரும் பரபரப்பு.

 policeசென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த போலி எஸ்ஐ ஒருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இதனால் போலிஸார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள வேப்பேரியில் சென்னை போலீஸ் கமிஷனரின் புதிய அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று இந்த அலுவலகத்துக்குள் ஒரு மர்ம நபர் நுழைந்து லிப்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த துணை ஆணையர் மனோகரன், உதவி ஆணையர் நந்தகுமார் ஆகியோர் அவரைப்பார்த்து சந்தேகமடைந்து அவரை பற்றி விசாரித்துள்ளனர்.

அதற்கு அவர், “ நான் அண்ணாநகரில் எஸ்.ஐ ஆக இருக்கிறேன்” என்று பதில் கூறியுள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் கொண்ட துணை ஆணையர் அவரை விசாரிக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை வேப்பேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் பாலமுருகன் என்றும் அவருக்கு வயது 35 என்றும்  ரூ.3 லட்சம் லஞ்சமாக கொடுத்து போலி சப் இன்ஸ்பெக்டர் ஐ.டியை வாங்கியதாகவும் தெரியவந்தது. இதற்கு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உடந்தை என கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கமிஷனர் அலுவலகத்திலேயே போலி எஸ்.ஐயாக ஒருவர் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply