வார ராசிபலன் 16/11/14 முதல் 22 /11/14

download

அனுபவ அறிவை பயன்படுத்தி நற்பலன் பெறும், மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் ராகு, எட்டாம் இடத்தில் சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். எந்த செயலிலும் முன்யோசனையுடன் ஈடுபடுவீர்கள். ஆடம்பரச்செலவு தவிர்ப்பதால், பணக்கடன் வாங்குகிற சூழ்நிலை விலகும். உடன்பிறந்தவர்களின் மாறுபட்ட கருத்தை, விமர்சிக்க வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.புத்திரரின் எதிர்கால நலனுக்காக, சில பணி மேற்கொள்வீர்கள். சீரான ஓய்வு, சத்தான உணவு உடல்நலம் பாதுகாக்கும். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினரால், உதவி உண்டு. தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். இயந்திர பிரிவு பணியாளர்கள், பாதுகாப்பு முறையை தவறாமல் பின்பற்றவும். பெண்கள், குடும்பத்தின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். மாணவர்கள், நண்பரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவர்.

சந்திராஷ்டமம்: 22.11.14 காலை 7:44 மணி முதல், அன்று நாள் முழுவதும்.


பரிகாரம்: தன்வந்தரி பகவானை வழிபடுவதுடன், ஏழைச் சிறுவர்களின் மருத்துவ செலவுக்கு உதவலாம்.

நடை, உடை செயலில் பிறரை வசீகரிக்கும், ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், ஏழாம் இடத்தில் அனுகூலக் குறைவாக உள்ளார். சனி, புதன், கேது வாழ்வு முறை சிறக்க தேவையான நற்பலன் வழங்குவர். புதிய செலவுகளால் சேமிப்பு குறையும். அதிக விலையுள்ள பொருளை, கவனமுடன் பயன்படுத்தவும். குடும்ப உறப்பினர்களிடம் ஒற்றுமை குணம் வளரும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும். புத்திரர் படிப்பு, செயல் திறனில் சிறப்பு சேர்த்திடுவர். உடலில் பிணி தொந்தரவு குறையும். இல்லறத்துணையின் மாறுபட்ட கருத்துகளை பொறுத்துக் கொள்ளுதல், நன்மை தரும். தொழில் வளர்ச்சி பெற, புதிய வாய்ப்பு வரும். பணியாளர்கள், கடமை உணர்ந்து செயல்படுவர். பெண்கள், கணவர் பற்றி பிறர் சொல்லும் குறைகளில், உண்மையை உணர்வது நல்லது. மாணவர்கள், அதிக பயன் தராத பொருளை வாங்கும் ஆர்வத்தை தவிர்க்கவும்.

பரிகாரம்: அன்னை மீனாட்சியை வழிபடுவதுடன், ஏழைப்பெண் திருமணத்திற்கு உதவலாம்.

நற்செயல்புரிந்து மனமகிழ்ச்சி பெறுகின்ற, மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டில் குரு, ஆறாம் இடத்தில் உள்ள சூரியன் அனுகூலமாக உள்ளனர். பொது இடங்களில் நல்ல கருத்துகளை பேசுவதிலும், நிதானம் பின்பற்றவும். உடன் பிறந்தவர்களின் உதவி, மனதில் ஊக்கம் தரும். சிலர், வெளியூர் பயணம் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படலாம். புத்திரரின் செயல்களை ஒழுங்கு செய்வதால், பிரச்னை வராமல் தவிர்க்கலாம். உடல் நலம் ஆரோக்கியம் பெறும், அரசு தொடர்பான விஷயம் அனுகூலம் தரும். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர், உங்களிடம் கருத்து பேதம் கொள்வர். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள், கூடுதல் வேலைவாய்ப்பை தவறாமல் ஏற்கவும். பெண்கள், குடும்பச் செலவில் சிக்கனம் நல்லது. மாணவர்கள், புதியவர்களின் வற்புறுத்தல்களை பரிசீலிக்க வேண்டாம்.

பரிகாரம்: விஷ்ணு பகவானை வழிபடுவதுடன், இனிப்பு பதார்த்தம் நிவேதனம் செய்து பிரசாதம் வழங்கலாம்.

கருணை நிறைந்த மனதுடன் பிறருக்கு உதவும், கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு ராகு, புதன், சுக்கிரன், செவ்வாய் இந்த வாரம் நற்பலன் தருவர். புதிய முயற்சியில் நன்மை கிடைக்கும். உடன் பிறந்தவர் வகையில், மங்கள நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை முன்னேற்றம் பெறும். குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.புத்திரர், அறிவு செயல்திறனில் முன்னேற்றம் பெறுவர். வழக்கு விவகாரத்தில் அனுகூலத்தீர்வு கிடைக்க, காலம் கனிந்துவரும். இல்லறத்துணை சொல்லும் ஆலோசனை, உங்கள் வாழ்வில் புதிய மாற்றம் தரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். பணியாளர்கள், சிறப்பாக செயல்பட்டு பாராட்டு, வெகுமதி பெறுவீர்கள். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி, இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். மாணவர்களின் படிப்புக்கான தேவை, திருப்திகர அளவில் நிறைவேறும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுவதுடன், கோவில் யானைக்கு பழம், பச்சரிசி, வெல்லம் வழங்கலாம்.

துணிச்சலுடன் செயல்புரிந்து கூடுதல் நன்மை பெறும், சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ள சனி, நான்காம் இடத்தில் உள்ள சுக்கிரன் நற்பலன் தருவர். உறவினர் மீதான வருத்தம் வெளிப்படும் விதமாக பேச வேண்டாம். எதிர்ப்பான சூழல் விலகி, வாழ்வில் முன்னேற புதிய வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி நடத்த, அனுகூலம் உண்டு. புத்திரர், அனுபவம் இல்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில், கண்காணிப்பது நல்லது. உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி, பணவரவு ஓரளவு கூடும். பணியாளர்கள், கால அவகாசத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவீர்கள். பெண்கள், குடும்ப நலன் சிறக்க கூடுதல் அக்கறை கொள்வீர்கள். மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் கருத்துகளை மதித்து செயல்படவேண்டும்.

பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபடுவதுடன், பறவைகளுக்கு தானியம் வைக்கலாம்.

அழகை ஆராதிக்கும் கலைரசனை மிகுந்த, கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சூரியன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் குருபகவான் அனுகூல அமர்வில் உள்ளனர். உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பவர், வெட்கி தலைகுனியும் நிலை உருவாகும். பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். உறவினர், நண்பரின் உதவி உண்டு. வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும்.புத்திரரின் மனக்கவலை மாற, இயன்ற அளவில் உதவுவீர்கள். சத்தான உணவு உண்பதும், சீரான ஓய்வும் உடல் நலம் பாதுகாக்கும். இல்லறத்துணையின் அன்பு நிறைந்த மனதை வாழ்த்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறை, தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள், செலவுகளில் சிக்கனம் வேண்டும். பெண்கள், பிள்ளைகள் நலன் சிறக்க பணி மேற்கொள்வர். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதுடன், சித்த வைத்தியம் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவலாம்.

நியாய, தர்ம குணங்களை கண்ணென போற்றும், துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், செவ்வாய், கேது கூடுதல் நற்பலன் தருவர். அவசியமற்ற வகையிலான பணச்செலவை தவிர்ப்பதால், மனம் இலகுவாகும். உங்களின் நல்ல கருத்து நிறைந்த பேச்சு, உறவினர், நண்பர்களிடம் வரவேற்பு பெறும். முருகப் பெருமானின் நல்லருள் பலம், குடும்பத்தில் பல்வேறு நன்மை உருவாக துணை நிற்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் உடல் நலத்தில் உரிய கவனம் வேண்டும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் அபிவிருத்தி செய்ய, தேவையான நிதியுதவி கிடைக்கும். பணியாளர்கள், ஓரளவு சலுகை பெறுவீர்கள். பெண்கள், உறவினர் வீட்டு மங்கள நிகழ்ச்சி சிறப்பு பெற உதவுவீர்கள். மாணவர்கள், படிப்பில் உரிய கவனம் கொள்வர்.

பரிகாரம்: சனி பகவானை வழிபடுவதுடன் நீதி, நேர்மை குணம் பின்பற்றுபவர்களுக்கு உதவலாம்.

வாழ்வுமுறையை நெறிப்படுத்தி தகுந்த நன்மை பெறும், விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், குரு, ராகுவின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. குடும்பத்தின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்ற, உபரி பணவரவு பயன்படும். பேச்சு, செயல் சிறந்து, முகத்தில் சந்தோஷப் பொலிவு உருவாகும். உறவினர்களை உபசரிப்பதில், தாராள மனதுடன் ஈடுபடுவீர்கள். புத்திரரின் சந்தேகங்களுக்கு எளிய முறையில் விளக்கம் தந்து, அறிவு வளர்ப்பீர்கள். எதிரியிடம் விலகுவது நல்லது. இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம், கவனமுடன் பாதுகாக்கவும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், விதவிதமான உணவு தயாரிப்பதில் ஆர்வம் கொள்வீர்கள். மாணவர்கள், திட்டமிட்டு படிப்பதால், தேர்ச்சி விகிதம் கூடும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதுடன், நலிவுற்ற கிராமியக் கலைஞர்களுக்கு உதவலாம்.

சுறுசுறுப்புடன் செயல்புரிந்து பணி நிறைவேற்றும், தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் புதன், சனி, பன்னிரெண்டாம் இடத்தில் சுக்கிரன் சிறப்பான பலன் தரும் வகையில் உள்ளனர். உடல் நல ஆரோக்கியம் பேணுவதால், பணிகள் சிறப்பாக நிறைவேற்றலாம். உடன்பிறந்தவரின் செயல், மனவருத்தம் தரலாம். அக்கம், பக்கத்தவரின் அன்பு, உபசரிப்பு கிடைக்கும். வீடு, வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.புத்திரரின் குளறுபடியான செயலை, இதமுடன் சரி செய்யவும். இல்லறத்துணை, சேமிப்பு பணம் தந்து உதவுவார். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவினால் செழித்து வளரும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவீர்கள். பெண்கள், புத்தாடை அணிகலன் வாங்க நல்யோகம் உண்டு. மாணவர்கள், நண்பரின் கஷ்டத்தை தன் கஷ்டம் போல உணர்ந்து, தேவையான உதவி புரிவீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், வடை மாலை சார்த்தி பிரசாதம் வழங்கலாம்.

தன்னை உணர்ந்து, பிறரையும் நல்வழி நடத்தும், மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு செவ்வாய், சனி, ராகு தவிர, மற்ற கிரகங்கள் சிறப்பான பலன் தருவர். ஆன்மிக அருள்பலம், செயல் நிறைவேற துணை நிற்கும். மனதில் பிறருக்கு உதவுகிற எண்ணம் வளரும். பூர்வ சொத்தில் பெறுகிற பணவரவு கூடும். சிலர் வீடு, வாகனம் வாங்குகிற யோகம் உண்டு.புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். எதிரியால் வரும் கெடுதல், பலமிழக்கும். இல்லறத்துணை சொல்லும் ஆலோசனையை, மனம் ஏற்கும். தொழில், வியாபாரம் அபிவிருத்தியாகும். பணியாளர்கள், தொழில் நுட்ப அறிவு வளர்த்துக் கொள்வீர்கள். குடும்ப பெண்கள், தம் செயல் திறமையில் நம்பிக்கை கொள்வர். மாணவர்கள் கண்களின் பாதுகாப்பில், கூடுதல் கவனம் கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 15.11.14 நள்ளிரவு 12:01 மணி முதல், 17.11.14 மதியம் 1:44 மணி வரை

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதுடன், சித்ரான்னம் நிவேதம் செய்து, பக்தர்களுக்கு வழங்கலாம்.

துவங்கும் செயல்களை மனப்பூர்வமுடன் நிறைவேற்றும், கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய், சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். வெகுநாள் எதிர்பார்த்த நற்செயல், இனிதாக நிறைவேறும். உங்களை அதிகமாக புகழ்ந்து பேசுபவரிடம், நிதானித்து பழகவும். புதிய முயற்சி நிறைவேற அனுகூலம் உண்டு. உறவினர்களின் வருகை, வீட்டில் மகிழ்ச்சிகர தருணங்களை உருவாக்கும்.புத்திரர் உடல்நலம் சீர் பெற, மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். எதிர்ப்பாளரின் பேச்சு, செயல் உணர்ந்து தற்காத்துக் கொள்வீர்கள். தொழில், வியாபாரம் இனிய அணுகுமுறையால் செழித்து வளரும். பணியாளர்கள், பணியிடத்து சூழல் உணர்ந்து செயல்படுவீர்கள். பெண்கள், உறவினர் குடும்ப விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டாம். மாணவர்கள், நண்பரின் பொருட்களை பயன்படுத்துவதில் நிதானம் வேண்டும்.

சந்திராஷ்டமம்: 17.11.14 மதியம் 1:45 மணி முதல், 19.11.14 இரவு 12:00 மணி வரை

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதுடன் உறவினர், சுமங்கலி பெண்ணுக்கு வஸ்திரம் தானம் தரலாம்.

கடின உழைப்பால் வாழ்வில் முன்னேற்றம் காணும், மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, ஐந்தாம் இடத்தில் உச்சகுரு, எட்டாம் இடத்தில் புதன், ஒன்பதில் சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். உங்களின் நல்ல குணத்தை உறவினர், நண்பர் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்படும். பணிகளில் கூடுதல் கவனம் மட்டுமே, உரிய பலன் பெற்றுத் தரும். அக்கம், பக்கத்தவரின் அன்பை பெறுவதில், கவனம் கொள்வீர்கள். பிடிவாத குணம் தளர்ந்து, மனதில் அன்பு பெருகும்.புத்திரரின் நற்செயல், மகிழ்ச்சி தரும். காலமுறை உணவுப்பழக்கம் பின்பற்றுவது நல்லது. இல்லறத்துணையின் மனம், செயலில் உத்வேகம் பிறக்கும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். பணியாளர்கள், பணச்செலவில் சிக்கனம் நல்லது. பெண்கள், கணவரின் கூடுதல் அன்பு, பாசம் கிடைத்து மகிழ்வீர்கள். மாணவர்கள், புதிய நுணுக்கம் பின்பற்றி, படிப்பில் கூடுதல் தேர்ச்சி பெறுவர்.

சந்திராஷ்டமம்: 19.11.14 நள்ளிரவு 12:01 மணி முதல், 22.11.14 காலை 7:43 மணி வரை

பரிகாரம்: பைரவரை வழிபடுவதுடன், தலைச்சுமையாக பொருட்கள் விற்பவர்களுக்கு உதவலாம்.

Leave a Reply