திருச்செங்கோடு அருகே கிடைத்த நூற்றுக்கணக்கான வெள்ளிக்காசு புதையல். பெரும் பரபரப்பு.

silver coinநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 1800ஆம் ஆண்டுகால வெள்ளிக் காசு புதையல் கிடைத்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்செங்கோடு அருகேயுள்ள குமரமங்கலம் என்ற  கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவர் தனது வீட்டிற்கு கழிப்பறை கட்டுவதற்காக நேற்று நிலத்தை கூலியாட்கள் மூலம் தோண்டினார்.  சுமார் 5 அடி ஆழம் தோண்டியதும் அந்த இடத்தில் ஒருசில வெள்ளிக் காசுகள் புதையலாக கிடைத்தது. உடனே செல்வராஜ் திருச்செங்கோடு வருவாய் அலுவலகர்களுக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் கிடைத்ததும் வருவாய்க் கோட்டாட்சியர் சுமன், வட்டாட்சியர் குப்புசாமி, அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  வெள்ளிக் காசுகள் கிடைத்த இடத்தில் ஆள்களைக் கொண்டு மேலும் தோண்டச்செய்த போது  நூற்றுக்கணக்கான வெள்ளிக் காசுகள் கிடைத்தன. இதனால் இரவிலும் தோண்டும் பணி தொடர்ந்தது  

பழைமையான பாண்டீஸ்வரன் கோயிலுக்கு மேற்குப்புறம் அமைந்துள்ள இந்த இடத்தில் கிடைத்த வெள்ளிக் காசுகள் அனைத்தும் ஒரு ரூபாய் காசுகளாகும். அவை 1835, 1840ஆம் ஆண்டுகளைச் சார்ந்தவையாகும். 1835ஆம் ஆண்டு காசுகளில் நாலாவது வில்லியம் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, அவரது தலை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 1840ஆம் ஆண்டு காசுகளில் விக்டோரியா மகாராணி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வசித்தவர்கள் திருடர்களுக்குப் பயந்து நிலத்தில் காசுகளைப் புதைத்து வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருச்செங்கோட்டில் புதையல் கிடைத்த சம்பவம் வேகமாகப் பரவியது. இதையடுத்து, அந்த இடத்தில் திரளாக மக்கள் குவிந்தனர். இதனால், அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Leave a Reply