அதிபர் தேர்தலுக்காக பொய்ப்பிரச்சாரம் செய்கிறார் ராஜபக்சே. நார்வே அமைதிக்குழு தூதர்

rajapakseஅரசியல் லாபத்திற்காக தேர்தல் நேரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே பொய் பிரசாரம் செய்கிறார் என்று நார்வே அமைதிக் குழுவின் முன்னாள் தூதர் எரிக் சோல்ஹெம் கூறியுள்ளார்.

தனது ட்விட்டரில் இவ்வாறு கூறியுள்ள எரிக் சோல்ஹெம், தற்போது இலங்கையில், தேர்தல் நெருங்குவதால், பதவி பயத்தினால் தன்னைப் பற்றி பொய்யான விஷயங்களை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

விரைவில்  அவரது பொய்க் குற்றச்சாட்டுகளுக்கான பதிலை நான் வெளியிடுவேன் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

முன்னதாக,  இலங்கையில் நார்வேயின் சிறப்பு அமைதிக் குழுவின் தூதவராக இருந்த எரிக் சோல்ஹெம், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ரகசியமாக நிதியுதவி செய்ததாக  ராஜபக்சே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply