தானிய லட்டு

7715d4f2-ffce-4d32-b227-4aa102c67bc9_S_secvpf

தேவையான பொருட்கள் : 

பச்சைப்பயறு, வெள்ளை காராமணி, கொள்ளு, முழு உளுந்து, கோதுமை, பொட்டுக்கடலை, கேழ்வரகு, கம்பு, பச்சரிசி ஆகிய தானியங்கள் ஒவ்வொன்றும் தலா 50 கிராம்.

முந்திரி பருப்பு -25 கிராம்,
உலர்ந்த திராட்சை-25 கிராம்,
ஏலக்காய்-10 எண்ணிக்கை,
தேங்காய் துருவல்- கால் கப்,
கருப்பட்டி- தேவையான அளவு,
நெய்- தேவையான அளவு.

செய்முறை:-

• எல்லா தானியங்களையும் தனித்தனியாக வாணலியில் வறுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை நிதானமாக எரியவிட்டு வறுத்தால் தானியங்கள் கருகாது. நன்றாக வாசனை வரும் வகையில், சிவப்பாக வறுக்க வேண்டும்.

• வறுத்த தானியங்களை மிக்சியில் போட்டு அரைத்து, சல்லடையால் சலித்து மாவாக்கிக் கொள்ள வேண்டும்.

• கருப்பட்டியை நன்றாக தூளாக்கி அரைத்து, தானிய மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

• நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவும்.

• தேங்காய் துருவலையும் சிவக்க வறுத்து சேர்க்கவும்.

• நெய்யை நன்றாக காயவிட்டு, மாவுடன் கலந்து கொள்ளுங்கள்.

• சூடு இருக்கும் போதே கையால் லட்டாக பிடித்தால், தானிய லட்டு தயார் ஆகிவிடும்.

Leave a Reply