தேவையானபொருட்கள்:
- இறால்-1/2 கிலோ
- வெங்காயம்-1
- தக்காளி-1
- இஞ்சி பூண்டு பேஸ்ட்
- பச்சை மிளகாய்-4-5
- மஞ்சள் தூள்-1/4 tsp
- சிவப்பு மிளகாய் தூள்-2-tsp
- சீரக தூள்-1tsp
- மல்லி தூள்-2tsp
- கரம் மசாலா தூள்-1/2 tsp
- ஜாதிக்காய் தூள்-ஒரு சிட்டிகை
- உப்பு
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
செய்முறை :
- தக்காளி ,வெங்காயம்,பச்சைமிளகாயை விழுதுகளாக அரைத்துகொள்ளவும் .
- இறாலை உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து ஊற நன்றாக ஊறவைக்கவும் .
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் ஊறவைத்த இறாலை போட்டு நன்றாக வதக்கவும் .
- அதில் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் . நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த விழுது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும் .
- சீரக தூள் ,மல்லி தூள், கரம் மசாலா தூள், ஜாதிக்காய் தூள் உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்தது வரும் வரை வதக்கவும் .
- நன்றாக வதங்கியதும் கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும் .
- சுவையான இறால் மசாலா ரெடி .சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.