100 மாதங்களில் இரட்டிப்பாகும் கிசான் விகாஸ் பத்திரங்கள். அருண் ஜெட்லி அறிமுகம்

kisan vikas patraகிசான் விகாஸ் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு சரியாக 100 மாதங்களில் இரட்டிப்பாகும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்ட கிசான் விகாஸ் பத்திர திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இத்திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

போலியான நிதி நிறுவனங்களை நம்பி முதலீடு செய்து ஏமாந்து வருவதை தடுப்பதற்காக மீண்டும் கிசான் விகாஸ் பத்திரத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். நேற்று புதுடெல்லியில் இந்த திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து வைத்து பேசிய அவர் இந்த பத்திரத்தை வாங்கி பாதுகாப்பான முதலீட்டின் மூலம் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

100 மாதங்களில் நாம் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பு ஆகும் கிசான் விகாஸ் பத்திரம் ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் ஆகிய முக மதிப்புகளில் கிடைக்கும். ஒருவர், எத்தனன பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். உச்ச வரம்பு எதுவும் கிடையாது என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு சரியாக 100 மாதங்களில் அதாவது 8 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகும். கிசான் விகாஸ் பத்திரங்கள் ஆரம்பத்தில் தபால் அலுவலகங்கள் மூலம் விற்கப்படும் என்றும் பிறகு பொதுத் துறை வங்கிகள் மூலமும் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவரது பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இந்தப்பத்திரங்களை உரிமை மாற்றம் செய்து கொள்ள முடியும் என்றும் இதனை பிணையாக வைத்து கடன் பெற முடியும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 100 மாதங்களாக இருந்தாலும் முதலீடு செய்த இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு, அதாவது 30 மாதங்களுக்குப் பிறகு இதிலிருந்து வெளியேறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்ணயித்த காலத்துக்கு முன்பே வெளியேறினால் முழுமையான பணப்பலன் கிடைக்காது ஆண்டுக்கு 8 புள்ளி 7 சதவிகித வட்டி தரும் இத்திட்டத்திற்கு தற்போதைக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply