வழி தெரியாமல் எல்லை கோட்டை கடந்த இந்திய சிறுவனை ஒப்படைத்த பாகிஸ்தான் ராணுவம்

indian borderவழி தெரியாமல் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சென்ற இந்திய சிறுவனை பாகிஸ்தான் ராணுவம் நேற்று இந்தியாவிடம் ஒப்படைத்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜாநகர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் மன்ஜார் உசேன் என்ற சிறுவன், நவம்பர் 14ஆம் தேதி குய் ரட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வழி தெரியாமல் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு றி சென்றுவிட்டான். அந்த சிறுவனை பார்த்த பாகிஸ்தான் ராணுவம் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் அவன் வழி தெரியாமல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிவிட்டதை அறிதனர். பின்னர் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து  இந்திய ராணுவ அதிகாரிகளிடம் முறைப்படை நேற்று ஒப்படைத்தனர்.

சிறுவன் மன்ஜார் பத்திரமாக வீடு திரும்பியதற்கு பெரும் மகிழ்ச்சி அடைந்த அவனுடைய பெற்றோர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply