குழந்தைகள் இறப்புக்கு குடிப்பழக்கம்தான் காரணம். அன்புமணி கூறும் புதுத்தகவல்.

anbumaniதர்மபுரியில் அடுத்தடுத்து குழந்தைகள் இறந்ததால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் தர்மபுரி எம்.பி.அன்புமணி, குழந்தைகள் இறப்புக்கு குடிப்பழக்கம்தான் காரணம், மருத்துவர்கள் காரணமல்ல என்று புதியதாக ஒரு காரணத்தை கூறியுள்ளார்.

பாமக நிறுவனரின் ராம்தாஸ் அவர்களின் மகனும், தர்மபுரி எம்.பியுமான டாக்டர் அன்புமணி இன்று தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தைகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்டார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியபோது, “குழந்தைகள் இறப்பதற்கு இங்கு உள்ள  மருத்துவர்கள் காரணமல்ல. ஆண்கள் குடிப்பதினால் பெண்கள் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. குடிப்பழக்கம்தான் இதற்கெல்லாம் காரணம். மதுக்கடைகளை மூடுவது சம்பந்தமாக முதல்வரை சந்தித்து பேசுவேன்.

போதுமான மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இருதய பிரிவுகளுக்கு மருத்துவர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையை இங்கு கொண்டுவர வேண்டும். மற்றபடி குழந்தைகள் இறப்பதற்கு மருத்துவர்கள் காரணமல்ல” என்றார்

Leave a Reply