இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் போட்டியில் விளையாட இன்று இரவு ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இன்று இரவு 11.45 மணியளவில் மும்பையில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் நகருக்கு இந்திய அணியினர் சென்றடைகின்றனர்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 4 முதல் 8 வரை
இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 12 முதல் 16 வரை
மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 முதல் 30 வரை
நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 முதல் 7 வரை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி காயம் காரணமாக விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறதூ.
இதனால் வீராட்கோலி முதல் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக டெஸ்டில் கேப்டனாக பணிபுரிகிறார். 2–வது டெஸ்டில் இருந்து டோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் கடும் சவாலாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. இதனால் அதிகமாக பவுன்ஸ் ஆக கூடிய அங்குள்ள பிட்ச்சுகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடுவது மிகவும் கடினமானது.
இந்திய அணி கடைசியாக 2011–12–ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 4 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட் வாஷ்’ ஆகி இருந்தது. இதில் 3 டெஸ்டில் இன்னிங்சில் தோல்வியை தழுவி இருந்தது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் அக்னி பரீட்சை காத்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வருமாறு:–
டோனி (கேப்டன்),
வீராட் கோலி,
ஷிகார் தவான்,
முரளி விஜய்,
புஜாரா, ராகுல்,
ரகானே, ரெய்னா,
ரோகித்சர்மா,
இஷாந்த் சர்மா,
ரவிந்திர ஜடேஜா,
முகமது ஷமி,
விர்த்திமான் சஹா,
அஸ்வின்,
கரண்சர்மா,
புவனேஸ்வர்குமார்,
உமேஷ் யாதவ்,
நாமன் ஒஜா,
வருண் ஆரோன்.