கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத்துள்ள உணவுபொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.
பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து விடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வதில்லை.
இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பை கல்லீ ரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால், இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துவதாகவும், அதிகளவு கொழுப்பு காணப்படுவதால் சர்க்கரைநோய் மற்றும் இதயநோய்களை உருவாக்குகிறது.
ஈரலில் மிக அதிக அளவுக்கு கொழுப்பு சேர்வதால், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகிறது. உடல் பருமன் என்பது பரவலாகிவிட்ட இந்தக் காலக் கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கல்லீரல் கொழுப்பு என்பதும் அதிகரித்து வருவதாகவும், அவை தொடர்பான நோய்களும் உயர்ந்து வருவதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்கிறார் பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன். அவர் கூறியதாவது:-
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உணவுப் பொருள் கெடாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை 100 சத வீதம் கல்லீரலை குறிவைத்து தாக்குகிறது. இந்த நொறுக்குத் தீனிகளை அதிகம் விரும்பி சாப்பிடுவது குழந்தைகள்தான். இவை ருசியாக இருப்பதால் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுகிறார்கள்.
நொறுக்குத் தீனிகளால் 10 வகையான கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன. 1. ஹெப்பாடிட்டீஸ் ஏ 2. ஹெப்பா டிட்டீஸ் பி 3. ஹெப்பாடிட்டீஸ் சி 4. ஹெப்பாடிட்டீஸ் டி 5. ஹெப்பாடி ட்டீஸ் இ 6. சைரோசிஸ் 7. கலோலி திசிஸ் 8. கலேசிஸ்டி டிஸ் 9. கார்சி னோமோ 10. ஹெபடோமெகலி. நொறுக்குத் தீனிகளில் உள்ள நச்சுப் பொருட்களை முதலில் கல்லீரல் சுத்திகரிக்கிறது. எஞ்சிய வற்றை சிறு நீரகம் சுத்திகரிக்கிறது.
நொறுக்குத் தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும். நொறுக்குத்தீனியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அவை உடனுக்குடன் ஜீரனமா காமல் குடலில் தேங்குகிறது. இவைதான் விஷமாக மாறுகிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டால் அஜீரணக் கோளாறு, பசியின்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி காய்ச்சல் போன்றவைஏற்படும்.
ஜீரண மண்டல பாதிப்பு ………
கல்லீரலில் கொழுப்பு அதிகரித்தால் முதலில் பாதிப்படைவது ஜீரணம் தான். வயிற்றில்ஜீரணம் சரிவர நடைபெற, கல்லீரல், பித்தநீரை தயாரிக்கிறது. பித்த நீர் தவிர, கல்லீரல் ரத்த புரதம் மற்றும் நூற்றுக் கணக்கான என்ஜைம்களை தயாரிக்கிறது. இவற்றால் ஜீரணமும், இதர உடலின் வேலைப்பாடுகள் சரிவர நடக்கும். உணவிலிருந்துகிடைக்கும் சர்க்கரையை லிவர் `கிளைக்கோஜென்’ ஆக மாற்றி அதை சேமித்து வைக்கிறது. தேவைப்படும் போது தருகிறது.
உடலிலிருந்து நச்சுப்பொருட் களை நீக்குவதையும் கல்லீரல் செய்கிறது. குளூகோஸ், விட்டமின்கள் ஏ, பி12, டி, இரும்பு, காப்பர் முதலியவற்றை கல்லீரல் சேமித்து வைக்கிறது. கார்போ ஹைடிரேட்களையும், புரதத்தையும் கொழுப்பாக மாற்றி கல்லீரல், பிற்கால தேவைக்காக சேமித்து வைக்கிறது. கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்ந்தால் கல்லீரல் வீங்கிவிடும். நீரிழிவு மற்றும் அதீத பருமன் உள்ளவர்களுக்கு இது ஏற்படும்.
80% குழந்தைகள் பாதிப்பு…….
குழந்தைகள் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை விரும்பி சாப்பிடுகின்றன. நொறுக்கு தீனிகளில்உள்ள கொழுப்பு குழந்தைகளின் கல்லீரலின் மேல் பகுதியில் படிந்து பருமனாக மாறி விடுகிறது. தற்போது நம் நாட்டில் உள்ள 80 சதவீதம் குழந்தைகள் இதுபோன்ற கொழுப்பு மிகுந்த ஈரலை உடையவர்களாக உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளிடம் இது போன்ற கோளாறுகள் வெறும் 20 சத வீதம் மட்டும்தான் இருந்தது.
இதற்கு காரணம் ரசாயணம் கலக்காத உணவுகள்தான். ஆனால் தற்போது ரசாயணம் கலக்காத உணவைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. சில உணவுகளில் ருசிக்காக சில ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை நம்மூர் கடைகளில் சாஷே பாக்கெட்டுகளில் வைத்து விற்கிறார்கள். அதை தவிர்க்க வேண்டும்.
தடுக்க வழிகள்…….
உடல்பருமனைக் குறைக்கும்போது, கல்லீரலில் உள்ள கொழுப்பானது தானாகவே கரைந்துவிடும். கலோரி கட்டுப்பாடு காரணமாக கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும். எனவே உடல் பருமனைத் தவிர்ப்போம். கொழுப்புச் சத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவோம். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனி களை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.
வீட்டில் தயாரித்த உணவுகளை கொடுப்பது நல்லது. உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் ஏதாவது சில பழங்களை உண்ணலாம். குழம்பு போன்றவற்றை சமைத்த அன்று மட் டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடக்கூடாது. ரசாயண குளிர்பானங்களை அருந்த கூ டாது. கல்லீரல் நோயாளி கள் அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது.
சோடா உப்பு கலந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாத உணவுகள் வேர்கடலை மற்றும் கிழங்கு வகைகளை தவிர்க்கவேண்டும். உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். இளநீர், கரும்புச்சாறு, தேங்காய் பால் அருந்தலாம். கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சைவ உணவே சிறந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சை ஜுஸ், கேரட் ஜுஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் சுலபமாக பிரியும்.
மலமிளகும். எலுமிச்சை சாறு சேர்த்த நீரை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரலின் செல்கள் பலமடையும். மஞ்சள் காமாலைக்கு நல்லது. சத்துள்ள ஆகாரத்தால் கல்லீரலை புதுப்பிக்க முடியும். பூண்டை தி சரி சமையலில் சேர்ப்பது நல்லது. சீரகப்பொடி கலந்த மோர் ஜீரணத்தை மேம் படுத்தும்.
கல்லீரல் கோளாறுகளை தவிர்க்க, சமையல் எண்ணெய்யை 20 லிருந்து 30 கிராம் வரை தினசரி உபயோகிக்கவும். அதிக எண்ணெய் ஆபத்து என்கிறார் சென்னை பெரம்பூர் சென் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேசன்.
மேலும் சில பாதுகாப்பு குறிப்புக்கள்
கல்லீரல் பிரச்னைகளை, குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். குழந்தைகளுக்கானப் பிரச்னைகள் பிற வியிலேயே வரக்கூடியவை. பெரியவர்களுக்கு ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத காரணங்களால் கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன” என்று எச்சரிக்கும் டாக்டர் நரேஷ் சண்முகம், கல்லீரல் பாதுகாப்புபற்றி அளிக்கும் குறி ப்புக்கள் இங்கே…
1. கொழுப்பை குறைப்போம்
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அதிகப்படியான கொழுப்புதான் கல்லீரல் பிரச்னைக்கு மிக முக்கியக் காரணம். கொழுப்பு கல்லீரல் திசுக்களில் சேகரித்து வைக்கப்படும்போது, கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்படும். நாள் ஆக ஆக பாதிக்கப்பட்ட கல்லீரல் செல்களும் அழிந்துவிடும். பின்னர், அந்தக் கொழுப்பு ரத்தத் தில் பயணித்து உடலின் வேறு பகுதிகளுக்கும் சென்றுவிடு ம். இப்படி லட்சக் கணக்கில் கல்லீரல் செல்கள் அழியும்போ\து கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis )ஏற்படும். இதைத் தவிர்க்க உணவில் கொழுப்பு அளவைக் குறைக்க வேண் டும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரியைக் கொழுப்பாக மாற்றும் பணியைக் கல்லீரல் செய்கிறது. சராசரியாக பாசல் மெட்டபாலிக் ரேட் (basal meta bolic rate) என்பது ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 1,600 – 1,800 கலோரியாகவும் பெண்களுக்கு 1,300 முதல் 1,500 க லோரியாகவும் இருக்கவேண்டும். உங்கள் உடலுக்கு ஏற்ற பாசல் மெட்டபாலிக் ரேட் எவ்வளவு என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ற வகையில் உங்கள் உ ணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பாடி மாஸ் இன்டெக்ஸ் குறியீடு 17 முதல் 24.99 என்ற அளவில் இருக்கும் படி பார்த்துக்கொள்வது அவசி யம்.
2. இயற்கை உணவு
ஆட்டிறைச்சியையும் மாட்டிறைச்சியையும் தவிர்க்க வேண்டும். மாற்றாக, மீன் சாப்பிடலாம். அதுவும் எண்ணெயில் பொரிக்காமல், குழம்பு மீன்களாகச் சாப்பிடலாம். காய் கறிகள், பழங்கள், பருப்பு வகைகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த் துக்கொள்ளலாம். உடல் பருமன் ஏற்படாமல் இருக்க, ஐஸ்கிரீம், நொறுக்குத் தீனிகள், சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். இது மாரடைப்பு, சர்க்கரை நோய், ரத்தக் கொதி ப்பு போன்றவற்றையும் தவிர்க்க உதவும்.
3. உடற்பயிற்சி
கொழுப்பைக் கரைக்கவும் உடல் எடை யைக் குறைக்கவும் உடற்பயிற்சி நல்ல வழி. நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங் , யோகா… உங்களுக்குத் தோதான உடற்பயிற்சி எதுவோ, அதைச்செய்யுங்கள். உடலைக் கட்டுக்கோப்பாக வைத் துக் கொள்ளுங்கள்.
4. மதுவுக்கு நோ நோ
மது அருந்தும்போது அது கல்லீரலைத்தான் சென்று அடைகிறது. அங்கு அது செல்களுக் கு ஆற்றலை அளிக்கக்கூடிய மைய அமைப்பான மைட்டோ கான்டீரியாவைத் தாக்குகிறது. இதனால், செல்களுக்குப் போதுமான ஆற்றல் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றன. செல்கள் பாதிக்கப்படும்போது, அந்த இடத்தைக் கொழுப்பு ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனாலும், கல்லீரல் பெரிதாகும். பின்னர் அந்த செல் முற்றிலும் இறக்கும்போது, சுருங்குதல் என்பது நடக்கும். பாதிப்பைத் தானாகவே சரிசெய்து கொள்ளும் தன்மை உள்ளதால், கல்லீரல் புதிய செல்களை உற்பத்தி செய்யும். ஆ னால், அந்த நேரத்தில் கல்லீரல் புற்று நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கி றது. இப்பிரச்னைகளைத் தவிர்க்க மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
5. பாதுகாப்பான குடிநீர்
எலிக் காய்ச்சல், டைஃபாய்டு போன்ற வைரஸ் மூலம் பரவும் நோய்கள் கல்லீரலில்தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கல்லீரலில்ஹெபடைடிஸ் ஏ, பி, சி என பல வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்தக் கிருமிகள் அசுத்த மான தண்ணீர், ஆரோக்கியமற்ற சூழ்நிலையில்தான் பரவுகின்றன. எனவே, சுத்தமான தண்ணீ ரும் உணவும் கல்லீரல் பாதுகாப்புக்கு முக்கியமான அம்சங்கள். இதில் கவனம் செலுத்துங்கள். ஹெபடைடி ஸ் ஏ, பி-யைத் தவிர்க்க தடுப்பு ஊசியும் போடலாம்.
6. பரிசோதனை
பிறந்த குழந்தைகளுக்குச் சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம், 101 வகை வளர்சிதை மாற்றப் பிரச்னைகளைக் கண் டறியலாம். ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்தால், அதைக் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
7. மருந்து
அதீதமான மருந்துப்பயன்பாடும் கல்லீரலைப் பாதிக்கும். எனவே, மருத்துவர்களின் பரிந்துரை இன்றி மருந்துகள் எடுத்துக் கொள்வதைத் தவிருங்கள்.
8. ஹெல்த் செக்கப்
பொதுவாக 35 முதல் 50 வயதுக்குள் இருப்பவர்கள்தான் கல்லீரல் பாதிப்பை அதிகம் எதிர்கொள்கிறார்கள். எனவே, இந்த வயதினர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்து கொள்வது நல்லது. வாய்ப்பு இல்லாவிட்டால், கல்லீரல் செயல்பாடு பரிசோதனையாவது செய்து கொள்ள வேண்டும்.
எல்லாவிதத்திலும் நம் உடலுக்குக் காவல்காரனாக இருக்கும் கல்லீரலை நாம் எந்த அளவுக்குப் பாதுகாப்பாகப் பராமரிக்கிறோம் என்பதை எல்லோரும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியநேரம் இது. காவல்காரனையும் காக்க வேண்டியது நம் கடமை அல்லவா!