அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளிதழ் “டைம்’ நேற்று வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள பதிப்பில் இந்த ஆண்டின் மிகச் சிறந்த 25 கண்டுபிடிப்புகளின் பட்டியலில் இந்தியாவின் “மங்கள்யான்’ இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
செவ்வாய் கிரகத்துக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த மாதம் அனுப்பிய மங்கள்யான் குறித்து அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைய வல்லரசு நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகளால் முடியவில்லை. ஆனால் செவ்வாயின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தைச் செலுத்தி, இந்தியா சாதனை செய்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை எட்டியதன் மூலம், மற்ற ஆசிய நாடுகள் எதுவும் இதுவரை செய்திராத சாதனையை இந்தியா செய்துள்ளது. இந்தியாவின் மங்கள்யான், சூப்பர்ஸ்மார்ட் ஸ்பேஸ்கிராஃப்ட் ஆகும்.
வெறும் ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள மங்கள்யானில், அங்குள்ள மீத்தேன் வாயுவை அளவிடும் கருவி உள்பட நான்கு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
விண்வெளித் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் வலிமை, இந்த விண்கலம் மூலம் நிரூபணமாகியுள்ளது என “டைம்’ இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.