மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அஞ்சல் பிரிவில் நிரப்பப்பட உள்ள 806 Postman/Mail Guard பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 806
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Postman – 797
2. Mail Guard – 09
வயது வரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Postman பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Mail Guard பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 5200 – 20,200 + தர ஊதியம் ரூ.2000.
தேர்வு செய்யப்படும் முறை: திறனறியும் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.400. SC/ST/PH/பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.dopchennai.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tamilnadupost.nic.in/rec/Notification1411.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.