தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி. தமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.

andamanஅந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 27ம் தேதி முதல் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், ”தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால், வரும் 27ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும்.

அதேபோல், குமரி கடல் பகுதியில் இருந்த மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது லட்சத்தீவு அருகே நிலைகொண்டுள்ளது. இதனால், தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில், திருவாரூரில் 6 செ.மீ. மழையும், மயிலாடுதுறையில் 5 செ.மீ.யும், நாகப்பட்டினத்தில் 4 செ.மீ.யும், நீடாமங்கலம், மன்னார்குடி, சிவகாசி, இளையான்குடி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply