கடந்த ஐந்து ஆண்டுகளாக ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டி அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வந்த வேளையில் இன்னும் ஓராண்டுக்கு பழைய ரேஷன் கார்டே செல்லத்தக்கது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு, 2009ஆம் ஆண்டுவரை செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 2009ஆம் ஆண்டு புதிய கார்டு வழங்காமல் பழைய ரேஷன் கார்டே செல்லும் என அரசு அறிவித்து அதில் உள்தாள் ஒட்டி பயன்படுத்தி வந்தது. இதே போல் ஒவ்வொரு ஆண்டும் செய்து வந்த அரசு, தற்போது 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பழைய ரேஷன் கார்டே செல்லும் என அறிவித்தது. இந்த ஆண்டும் உள்தாள் ஒட்டப்படும் என தெரிகிறாது
2011ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 1கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தாக கூறப்படுகிறது. உணவுபொருள் விநியோகத்துறைக்கு தமிழகம் முழுவதும் மொத்தம் 33ஆயிரத்து 222 கடைகள் உள்ளன.
டிஜிட்டல் வடிவில் புதிய ரேஷன் கார்டு தயாராகிக்கொண்டு இருப்பதால் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.