டிசம்பர் 4ல் தமிழக சட்டமன்றம் கூடுகிறது.

tn assemblyமுதலமைச்சர் பன்னீர் செல்வம் முதல்வர் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி கூடும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. . சட்டசபை கூட்டம் கூட்டுவது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதிக்கும் முதல்வர் பன்னீர் செல்வதிற்கும் அறிக்கை கடந்த சில நாட்களாக அறிக்கை போர் நடந்தது என்பதை அனைவரும் அறிவோம்.

மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளில் சரியான  முடிவுகளை எடுக்க   சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் குறிப்பாக முல்லைப் பெரியாறு பிரச்னை, காவியாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில்,தமிழக சட்டமன்றக் கூட்டம் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி கூட்டப்படும் என்றும் கூட்டத்தொடர் தலைமைச் செயலத்தில் உள்ள  சட்டமன்றப் பேரவை மன்றத்தில் கூடும் என்றும்  சட்டப் பேரவைச் செயலர்   வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply