உலக மற்றும் ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சீன நீச்சல் வீரர் சன் யாங்குக்கு கடந்த மே மாதம் நடந்த தேசிய நீச்சல் போட்டியின் போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து சீன ஊக்க மருந்து தடுப்பு மருந்து நடத்திய சோதனையில் மருந்து உட்கொண்டதில் ஏற்பட்ட பிரச்சினையால் தான் இந்த தவறு நடந்தது தெரியவந்துள்ளது. இதனால் சன் யாங்குக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படவில்லை. அவருக்கு 3 மாத காலம் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.