நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் சார்பு வங்கிகளில் 6,425 கிளார்க் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன.
பட்டதாரிகள்
ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் கிளார்க் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
தகுதியுள்ள நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வில், பொது அறிவு, ஆங்கிலம், கணிதம், ரீசனிங், மார்க்கெட்டிங் மற்றும் கணினி அறிவு ஆகிய 5 பகுதிகளில் இருந்து தலா 40 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். இரண்டே கால் மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். தவறான கேள்விகளுக்கு மைனஸ் மார்க் உண்டு. அதாவது 4 கேள்விகளுக்குத் தவறாக விடை அளித்தால் ஒரு மதிப்பெண்ணைக் குறைத்துவிடுவார்கள்.
டிசம்பர் மாதம் 9
ஆன்லைன் தேர்வை அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி வாதவாக்கில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெறும். தகுதியுள்ள பட்டதாரிகள் டிசம்பர் மாதம் 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.sbi.co.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தையும் ஆன்லைனிலே செலுத்திவிடலாம். வங்கிகளில் செலான் மூலம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளார்க் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோர் ஸ்டேட் வங்கியின் சார்பு வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டீயாலா போன்ற வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் பணியமர்த்தப்படுவார்கள்.