நித்யானந்தா முழு ஆண்மை பலத்துடன் இருப்பதாக அவருடைய ஆண்மை பரிசோதனை அறிக்கை தெரிவிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி நித்தியானந்தாவுக்கு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடைபெற்றது. அந்த பரிசோதனையின் அறிக்கை நேற்று கர்நாடக நீதிமன்றத்தில் சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். இந்த பரிசோதனை அறிக்கையில் நித்யானந்தா முழு ஆண்மை பலத்துடன் இருக்கிறார்’ எனக் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெங்களூருவில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு பாலியல் புகார்கள் கூறப்பட்டதை அடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையின்போது, தனக்கு ஆண்மை சக்தி இல்லை என நித்தியானந்தா கூறியிருந்தார். இதையடுத்து, அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியதால், கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், பெங்களூரு மடிவாளாவில் உள்ள மரபணு பரிசோதனை மையத்தில் குரல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டரை மாதமாக ஆய்வு செய்த டாக்டர்கள், 31 பக்கங்கள் கொண்ட மருத்துவ அறிக்கையை சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்தனர்.
இந்த பரிசோதனையின் முழு அறிக்கை இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.