அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் என்ற மாகாணத்தை சேர்ந்த ஒருவர் இந்த வருடம் அறிமுகமான புதிய விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கிய 24 மணி நேரத்திற்குள் விபத்துக்குள்ளாக்கியுள்ளார்.
அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் இந்த வருடம் வெளியான புதிய மாடல் கார் 2015 McLaren P1 என்ற காரை ரூ.7.4 கோடி கொடுத்து கடந்த புதன்கிழமை வாங்கினார். இந்த காரை வாங்கிய சிலமணி நேரத்தில் கார் டிரைவரின் உதவியோடு அவர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் கார் சுக்குநூறாக உடைந்தது. கார் உரிமையாளரும் டிரைவரும் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருடைய உயிருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கார் உரிமையாளர், காரை வாங்கிய 24 மணி நேரத்திற்குள் விபத்துக்குள்ள்ளாகிவிட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.