தீவிரவாதி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாட அனுமதிக்க முடியாது. இலங்கை காவல்துறை

prabhakaran birthdayஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாட முயன்ற ஒருவரை சிங்கள போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர். இதனால் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை காவல் துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா செய்தியாளர்களிடம் கூறியபோது, “கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, பிரபாகரனின் பிறந்தநாள் வாழ்த்துகள் அடங்கிய சுவரொட்டிகள், மடிக்கணினி, தகவல் சேகரிப்பு கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தீவிரவாதம் செய்த ஒரு தலைவரின் பிறந்த நாளை பொது இடங்களில் கொண்டாட அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ஆனால் இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 60-வது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் நேற்று முன் தினம் வெகு சிறப்பாகாகொண்டாடினர்.

Leave a Reply