இந்திய ரயில்வேயில் 950 துணை மருத்துவ பணி

train

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரயில்வேயின் அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகார், சென்னை, கவுகாத்தி, கொல்கத்தா, மெய்டா, மும்பை, ராஞ்சி, செகந்திராபாத், சிலிகுரி, பாட்னா, ஜம்மு ஸ்ரீநகர் ரயில்வே மண்டலங்களில் நிரப்பப்பட உள்ள 950 துணை மருத்துவ பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ஸ்டாப் நர்ஸ் – 438

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 20 – 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: நர்சிங் பாடத்தில் பிஎஸ்சி அல்லது ஜெனரல் நர்சிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

 

பணி: ஹெல்த் மற்றும் மலேரியா இன்ஸ்பெக்டர் – 227

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 33க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

தகுதி: பி.எஸ்சி வேதியியலுடன் ஹெல்த், சேனிட்டரி இன்ஸ்பெக்டர் அல்லது தேசிய தொழில் பயிற்சி கவுன்சிலின் ஒரு வருட தேசிய டிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: பார்மசிஸ்ட் – 168

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 20 – 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடங்களில் +2 தேர்ச்சியுடன் பார்மசி பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800.

 

பணி: இசிஜி டெக்னீசியன் – 02

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஒரு வருட இசிஜி டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 

பணி: ரேடியோகிராபர் – 25

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 19 – 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் +2 முடித்து ரேடியோகிராபி, எக்ஸ்ரே டெக்னீசியன், ரேடியோ டயாக்னசிஸ் டெக்னாலஜி ஆகிய துறைகளில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200- 20,200 + தர ஊதியம் ரூ.2000.

 

பணி: லேப் அசிஸ்டென்ட் – 26

வயது: 01.01.2015 தேதியின்படி 18 – 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200- 20,200 + தர ஊதியம் ரூ.2.000

 

பணி: ஆய்வக கண்காணிப்பாளர் – 31

வயது வரம்பு: 1.1.2015 அன்று 18 – 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பயோ கெமிஸ்ட்டிரி, மைக்ரோ பயாலஜி, லைப் சயின்ஸ் ஆகிய பாடங்களில் பிஎஸ்சி மற்றும் மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

 

பணி: ஹீமோ டயாலிசிஸ் டெக்னீசியன் – 01

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 20 – 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிஎஸ்சியுடன் ஹீமோ டயாலிசிஸ் துறையில் டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

 

பணி: கார்டியாலஜி டெக்னீசியன் – 04

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடத்தில் +2 முடித்து கார்டியாலஜி லேப் பாடத்தில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

 

பணி: ஆடியாலஜிஸ்ட் – 01

வயது: 01.01.2015 தேதியின்படி 18 – 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஆடியோ ஸ்பீச் மற்றும் தெரபியில் பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடங்கள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800

 

பணி: பிசியோதெரபிஸ்ட் – 09

தகுதி: பிசியோதெரபி துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

 

பணி: மாவட்ட விரிவாக்க கல்வியாளர் – 03

தகுதி: சோசியாலஜி, சோஷியல் வொர்க், கம்யூனிட்டி எஜூகேசன் ஆகிய துறைகளில் பட்டம் மற்றும் உடல்நலக் கல்வியில் 2 ஆண்டு டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

 

பணி: டயட்டீசியன் – 03

தகுதி: ஏதாவதொரு அறிவியல் துறையில் பி.எஸ்சி முடித்து டயட்டிக்ஸ் துறையில் ஒரு வருட முதுநிலை டிப்ளமோ மற்றும் ஏதாவதொரு மருத்துவமனையில் 3 மாதம் பயிற்சி அல்லது ஹோம் சயின்ஸ் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 33க்குள் இருக்க வேண்டும்.

 

பணி: கண்நோய் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் மூக்கு கண்ணாடி விற்பனையாளர் – 01

வயது வரம்பு: 01.01.2005 தேதியின்படி 18 – 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கண்ணொளி இயலில் பிஎஸ்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200- 20,200 + தர ஊதியம் ரூ.2,400.

 

பணி: கள பணியாளர் (ஆண்) – 01

தகுதி: வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் +2 முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900.

 

பணி: பல் உடல்நலவியல் வல்லுநர் – 01

தகுதி: உயிரியல் துறையில் பி.எஸ்சி பட்டத்துடன் பல் நலவியல் துறையில் 2 வருட சான்றிதழ் அல்லது டிப்ளமோவுடன் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

 

பணி: கண் பரிசோதகர் – 02

தகுதி: கண்ணொளி இயல் துறையில் பிஎஸ்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 33க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

 

பணி: காதொலி பரிசோதகர் – 02

தகுதி: காதொலி இயல் துறையில் பிஎஸ்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 33க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200- 20,200 + தர ஊதியம் ரூ.2,400.

 

பணி: எக்ஸ்ரே டெக்னீசியன் – 01

தகுதி: இயற்பியல், வேதியியல் பாடங்களில் +2 முடித்து ரேடியோகிராபி, எக்ஸ்ரே டெக்னீசியன், ரேடியோ டயாக்னசிஸ் துறையில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200- 20,200 + தர ஊதியம் ரூ.2,800.

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 33க்குள் இருக்க வேண்டும்.

 

பணி: கேத் லேப் டெக்னீசியன் – 01

தகுதி: கார்டியாக் லேப்பில் பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 33க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் செலான் மூலமோ அல்லது அஞ்சல் அலுவலகங்கள் மூலமோ செலுத்தலாம். எஸ்சி., எஸ்டியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் உள்ள காலியிடங்களுக்கு ஒரே நாளில் தேர்வு நடப்பதால் விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு மண்டலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் நடைபெறும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 08.02.2015.

விண்ணப்பிக்கும் முறை: சென்னை ரயில்வே மண்டல காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2014.

Leave a Reply