6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மூன்றாவது பாடமாக சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் முடிவெடுத்தது. இந்த முடிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கில் ஜெர்மனி மொழியை கேந்திரிய பள்ளியில் இருந்து நீக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை, அவசர மனுவாக கருதி விசாரிக்க கடந்த 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பதிலை உச்ச நீதிமன்றம் கோரியிருந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப் பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, 6,7,8-ம் வகுப்புகளில் சம்ஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாகக் கற்பிக் கும் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்த அனுமதி கோரினார். அதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், விசா ரணையை 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.