மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளிப்பதும் சுலபமாகிவிடும், வாழ்க் கைப் பயணமும்
இனியதாகிவிடும். ஒருவர் சிறந்த ஆளுமை அல்லது பர்சனாலிட்டி என்பது அந்த மனிதர் உலக அளவில் பேமஸ் என்பதாலோ அவருக்குச் சிக்ஸ் பேக் பாடி என்பதாலேயோ, பெரும் பணக்காரர் என்பதாலேயோ அமைவதில்லை.
ஒவ்வொருவருடைய தனித் தன்மைகளை வைத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. இன் றைய சூழலில் நடை முறை வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தேவைக்கு அதிகமாகவே நம்மிடம் புரையோடிக் கிடக்கிறது.
அவற்றைக்கையாளும் முறையி லும் நாம் கை தேர்ந்தவராகவே இருக்கிறோம். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள நம் சகமனிதர்களைக் கையாள்வதில் நாம் சற்றே பின் தங்கியுள்ளோம்.
கடமையைத் தவறாமல்செய்து முடிக்கும் பெர்சனலிட்டியை நீங்கள் கையாள வேண்டும் எனில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண் டியவை,
* அவரிடம் வியாபாரரீதியாகப் பேசாதீர்கள்.
*அவர் செய்ய வேண்டிய வேலையில் அவருடைய பொறுப்புகள் பற்றி மட்டும் அவரிடம் பேசுங்கள்.
*அவர் செய்யும் வேலையின் வெளிப்பாடு எந்தளவு ப்ராஜெக்டை பாதிக்கும் என்பதைப் பற்றி அவரிடம் தெளிவாகப் பேசுங்கள்.
*அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி அவர் உணர்ந்து கொண்டாரா என்பதைத் தெளிவுபடுத்திக் கொ ள்ளுங்கள்.
* இத்தகைய பெர்சனாலிட்டி கொண்ட மனிதரின் குடும்பம் மற்றும் நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தால் அவரின் கடமை தவறாத பண்பை மனதாரப் பாராட்டுங்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் எதிர்பார்ப்பதும், ஏங்கியிருப்பதும் அங்கீகாரத்திற்கும் பாராட்டுதல்களுக்கும் தான். இது கிடைக்காதவர்கள் தான் பெரும்பாலான நேரங்களில் விரக்தி அடைகிறார்கள். நிறுவனத்தின் பார்வையில் இருந்து ஒரு தலைவராக அவருடைய தேவைகளை அவர் கேட்கும் முன்பே பூர்த்தி செய்து விடுங்கள்.