சிகப்பு ரோஜாக்கள் 2. கமல் கேரக்டரில் ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற நடிகர்.

sigappu rojakkalகடந்த 1978ஆம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்ட சிகப்பு ரோஜாக்கள் படத்தின் 2–ம் பாகம் தற்போது தயாராகிறது. சைக்கோ கொலையாளியாக கமல்ஹாசனும், அவருடைய காதலியாக ஸ்ரீதேவியும் இந்த படத்தில் நடித்திருந்தனர். பாரதிராஜா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் 175 நாட்கள் ஓடி மாபெரும் வசூலை கொடுத்தது.,

தற்போது உருவாகவுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் கேரக்டரில் விஷாகா என்ற புதுமுகம் அறிமுகமாகவுள்ளார். இவர் ஹாலிவுட்டில் நடிப்பு பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா மகன் மனோஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Leave a Reply