தமிழக சட்டப்பேரவை முன்னவராக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வரானார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை முன்னவராக இருந்த பன்னீர்செல்வம், தற்போது முதல்வராக உள்ளார். இதனால், சட்டப்பேரவை புதிய முன்னவராக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ளார்.