சிம்புவின் ‘வாலு’ ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு. அஜீத் அட்வைஸ் செய்தாரா?

vaalu postponedசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவான பிரமாண்ட திரைப்படமான ‘லிங்கா’ வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ள நிலையில் அதற்கு அடுத்து 12 நாட்கள் இடைவெளியில் தனது “வாலு” ரிலீஸ் செய்யப்படும் என சிம்பு அதிரடியாக அறிவித்துள்ளார்,. லிங்கா தமிழகத்தில் சுமார் 600 தியேட்டர்களில் ரிலீசாகவுள்ள நிலையில் வெறும் 12 நாட்களில் அந்த படத்தை தூக்க திரையரங்கு உரிமையாளர்கள் முன்வர மாட்டார்கள். அதனால் சிம்புவின் வாலுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா? என்ற நிலைமை இருந்தது.

இந்நிலையில் சிம்புவின் நலனின் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அஜீத், வாலு படத்தை டிசம்பரில் வெளியிடுவது நல்லதல்ல, என்றும், டிசம்பர் ஜனவரி இரண்டு மாதங்களிலும் பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாவதால், வாலு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும் என்றும் அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரிக்கு மாற்றும்படியும் சிம்புவுக்கு அட்வைஸ் கூறியதாக கூறப்படுகிறது.

அஜித்தின் ஆலோசனையை மதித்து சிம்பு ‘வாலு’ படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு மாற்றியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. லிங்கா, ஐ, என்னை அறிந்தால் ஆம்பள போன்ற பெரிய பட்ஜெட் படங்களுடன் மோதவேண்டாம் என்று கூறிய அஜீத்தின் அட்வைஸை வாலு படத்தின் தயாரிப்பாளரும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. எனவே வாலு படத்தை பார்க்க சிம்பு ரசிகர்கள் பிப்ரவரி காத்திருக்க வேண்டும். வேறு வழியே இல்லை.

Leave a Reply