இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படும் என்றும் முதல்கட்டமாக 10 முதல் 12 ரயில் நிலையங்களை தனியார் உதவியுடன் ரயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுவரை ரயில் சேவையே இல்லாமல் இருந்த மேகலயா மாநிலத்தில் நேற்று முதன்முதலாக அசாம்-மேகலயாவை இணைக்கும் விதமாக மென்டிபதார் முதல் கொளகாத்தி வரையிலான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் மோடி பேசியபோது, “ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில், விமான நிலையங்களை விட அதிக வசதிகள் இருக்க வேண்டும். இதற்காக ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 10 முதல் 12 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் என அவர் கூறினார்.