திமுகவில் இருந்து விலகி அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த நடிகை குஷ்பு சமீபத்தில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் ஐக்கியமானார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு, ‘விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள்தான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை’ என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கைத்தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என தமிழக மக்களுக்கு தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு லட்சம் வீடு கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்த கட்சி காங்கிரஸ் கட்சி. இதுபோன்ற பல உதவிகளை காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்கு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தீவிரவாதம் யார் செய்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு கட்சி. விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள்தான். ஒரு இலக்கை சட்டப்படி அடையாமல் ஆயுதமேந்தி அடைய நினைத்தால் கண்டிப்பாக அது தீவிரவாதம்தான் என்று கூறியுள்ளார்.
குஷ்புவின் இந்த கருத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1w7P0mg” standard=”http://www.youtube.com/v/KB5gvbxAdaE?fs=1″ vars=”ytid=KB5gvbxAdaE&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3330″ /]