திருப்பதி வருமானம்!

[carousel ids=”47050,47051,47052,47053,47054″]

திருப்பதியில் ஆண்டுதோறும் குவியும் முடி காணிக்கை மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும்… ரூ.100 கோடி. டிக்கட் விற்பனை மூலமும் ரூ. 100 கோடி கிடைக்கிறது.

உண்டியல் அல்லாத நன்கொடை வருமானம் மட்டும் ரூ.100 கோடி. இங்கு ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை நன்கொடை அளிப்பவர்கள் குடும்பத்துடன் (ஐந்து பேர்) வந்து வி.ஐ.பி., காட்டேஜ்களில் இலவசமாகத் தங்கி சுவாமியை சிறப்பு தரிசனம் செய்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு ஒரு வஸ்திரமும், ஆறு லட்டுகளும் வழங்கப்படும். ஐந்து லட்சம் முதல் பத்துலட்சம் வரை நன்கொடை அளிப்பவர்கள் மூன்று நாட்கள் தங்கி வஸ்திரம், பத்து மகாபிரசாத பாக்கெட், 10 சிறிய லட்டு பெற்றுக் கொள்ளலாம். பத்துலட்சத்துக்கு அதிகமாக நன்கொடை செலுத்துவோர் 5 பேர் கொண்ட குடும்பமாக ஐந்து நாட்கள் தங்கி சுவாமியை வழிபடலாம். அர்ச்சனைக்கு பிறகு நடக்கும் பூஜையை இவர்கள் பார்க்க அனுமதியுண்டு. முதல் தடவை வரும்போது ஐந்து கிராம் தங்க காசு, தங்கமுலாம் பூசிய வெள்ளி பதக்கம் ஆகியவை தரப்படும். ஆண்டுதோறும் பத்து மகாபிரசாதம் பாக்கெட் மற்றும் 20 சிறிய லட்டுகள் வழங்கப்படும். இந்த நன்கொடைக்கு வருமானவரி விலக்கும் உண்டு.

tirumala-tirupati

திருப்பதியில் காட்டேஜ்கள் கட்டவும் விதிகளின் அடிப்படையில் நன்கொடை வழங்கலாம். இவர்கள் திருப்பதியில் ஆண்டில் ஒரு மாதம் தங்க அனுமதிக்கப்படுவர். ஆனால், ஒரே சமயத்தில் பத்துநாட்களுக்கு மேல் தங்க முடியாது. திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா நூலகம் 1993ல் அமைக்கப்பட்டது. இங்கு 40 ஆயிரம் இந்துமத வரலாற்று நூல்கள் உள்ளன. ஆங்கிலம், இந்தி மொழிகளில் இந்நூல்கள் இருக்கும்.

Leave a Reply